சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி : சுங்க அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி : சுங்க அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு

சுங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளமைக்கு எதிராக சுங்க அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையம் , விமான பொதி சேவைப் பிரிவு மற்றும் ஏற்றுமதி சேவைப் பிரிவு தவிர்ந்த ஏனைய அனைத்து சுங்க ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அலுவலக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவங்கொட தெரிவித்தார்.

சுங்க பணிப்பாளர் நாயகத்தை பதவியிலிருந்து நீக்கி, அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் ஶ்ரீமால் பெர்னாண்டோவை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதி நேற்று (29) வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment