ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தின் முலம் 51 கோடி ரூபாவுக்கு அதிக வருமானம் ஈட்டியதாக கூறி பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சந்தேகநபரான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மொஹமட் சித்தீக் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
10 இலட்சம் ரூபாவான ரொக்கப் பிணை மற்றும் 50 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம் ஒவ்வொரு மாதமும் முதலாவது ஞாயிறு மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் வௌிநாடு செல்வதற்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment