குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

குப்பைகளை அறுவைக்காட்டில் கொட்டுவதற்கான நடவடிக்கை ஆரம்பம்

புத்தளம் உள்ளூராட்சி மன்றங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அறுவைக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் கொட்டுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

புத்தளம் - அறுவைக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்கான ஆரம்பப் பணிகள் நிறைவுற்றுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் முதல்கட்டமாக 400 தொன் குப்பைகளைக் கொட்ட முடியும் எனவும் அதற்கான செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி நிறைவிற்கு வரவுள்ளதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி முதல் புத்தள மாவட்டத்தினுள்ளடங்கும் நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை இங்கு கொட்ட முடியும் எனவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை ரயில் மூலம் அறுவக்காட்டுக்கு கொண்டு செல்வதாக தீர்மானிக்கப்பட்டபோதிலும் தற்போது குறித்த குப்பைகளை களனி திண்மக்கழிவு சுத்திகரிப்பு மத்திய நிலையத்திற்கு கொண்டுசென்று அங்கு நீரகற்றப்பட்டு அறுவக்காடு திண்மக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment