மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் மேன்முறையீட்டு மனு நாளை - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 30, 2019

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் மேன்முறையீட்டு மனு நாளை

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. 

07.05 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது குறித்த வழக்கின் மேலதிக விசாரணை நாளைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தெஹிவளை பிரதேசத்தில் வைத்து 2012ம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

No comments:

Post a Comment