கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா (JDIK) யின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (01) ஆம் திகதி சனிக்கிழமை நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஜம்மிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்குடா பகுதிகளிலுள்ள JDIK யின் பராமரிப்பின் கீழுள்ள பள்ளிவாயல் நிருவாகிகள், ஜம்மிய்யாவின் உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா இப் பிரதேசத்தில் கடந்து வந்த பாதை தொடர்பாகவும் அதற்காக பாடுபட்ட சகோதரர்களும் நினைவு கூறப்பட்டதோடு எதிர் காலத்தில் தஃவா மற்றும் சமூக சேவை தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
கலந்து கொண்டோர்களுக்கு விளக்கவுரைகளை பொதுத்தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, நிருவாகத் தலைவர் ஏ.ஹபீப் காசிமி, பிரதித் தலைவர் எஸ்.எச்.அறபாத் ஸஹ்வி ஆகியோர்கள் வழங்கினர்.
சிறப்பாக நடைபெற்று முடிந்த இவ் ஒன்றுகூடல் பகற்போசனத்தோடு நிறைவு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment