ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் இன்று இடம்பெற இருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடல் நாளை இரவு 8 மணி வரையில் பிற்போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி உடனான கலந்துரையாடல் இன்று இரவு 7 மணியவில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற இருந்தது.
இருப்பினும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் குறித்த கலந்துரையாடல் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியுடனான முதலாவது கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன் தொடராகவே இரண்டாவது கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment