மீராவோடை உதுமான் வித்தியாலய ஐந்தாம் தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு - News View

About Us

About Us

Breaking

Saturday, December 1, 2018

மீராவோடை உதுமான் வித்தியாலய ஐந்தாம் தர மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழுள்ள மீராவோடை உதுமான் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

மீராவோடை உதுமான் வித்தியாலயத்தின் அதிபர் எம்.பீ.எம்.முபாரக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான் அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எம்.ஜாபிர் கரீம், ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரியாவிடை பெற்றுச் செல்லும் மாணவச் செல்வங்களின் அழகிய கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு பிரியாவிடைபெற்றுச் செல்லும் மாணவர்களுக்கு அதிதிகளால் நினைவுப்பரில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment