ரயில் கடவையை கடக்க முற்பட்ட, பட்டா ரக வாகனத்துடன் புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று (02) முற்பகல் கொடிகாமம் வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் பட்டா வாகனத்தை செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
புகையிரத கடவையை கடக்க முறப்பட்ட குறித்த பட்டா வாகனத்தின் பின்பகுதியில் புகையிரதம் மோதியுள்ளது. இதன் காரணமாக குறித்த பட்டா வாகனம் வீதியை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பட்டா வாகனம் அதன் பிற்பகுதியில் சிறிய அளவிலான பாதிப்புகளுடன் வீதிக்கு தள்ளப்பட்டதோடு, குடைசாயாத நிலையில், சாரதி எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ்.மயூரப்பிரியன்
No comments:
Post a Comment