முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் இன்று (02) நள்ளிரவு முதல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதற்கமைய, முதலாவது கிலோ மீற்றருக்கான கட்டணம் 50 ரூபாவாக அறவிடப்படும் என இலங்கை சுயதொழில் தொழிற்சங்கத்தினரின் தேசிய முச்சக்கர வண்டிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டதற்கமைய, அதன் பயனை பயணிகளுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இன்று நள்ளிரவு முதல் முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைக்காத சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment