தற்போதைய மழைக் காலநிலையைத் தொடர்ந்து நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்திருப்பதால், சுகாதார பாதுகாப்புடன் பொது மக்கள் செயற்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் நிலை உருவாகியுள்ளது என்று டெங்கு ஒழிப்பு தேசிய பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹஷித திசேரா சுட்டிக்காட்டியுள்ளார்
டெங்கு நோயாளர்களுள் 30 வீதமானோர் பாடசாலை மாணவர்களாவர். நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை துப்பரவு செய்வதில் கூடிய கவனம் செலுத்துமாறு டெங்கு விசேட வைத்தியர் ஹஷித திசேரா கூறினார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. நவம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட நுளம்பு ஒழிப்புக்கான இரண்டு தினங்களில் மாத்திரம் நுளம்புகள் பெருகக்கூடிய 57 சதவீதமானவை பாடசாலைகளாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பொதுமக்களைத் தெளிவுபடுத்த பாடசாலை மட்டத்தில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு எதிர்வரும் 7ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment