உறுதியற்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரேயொரு வழி பொதுத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

உறுதியற்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரேயொரு வழி பொதுத் தேர்தல் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

உறுதியற்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரேயொரு வழி பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதே ஆகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட பொதுத் தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என்றும் பிரதமர் கூறினார். பிரதமர் இன்று வெளியிட்டுள்ள விசேட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள சட்டபூர்வ அதிகாரம் குறித்து குறிப்பிடுகையில் இரண்டாவது குடியரசு யாப்பின் 70 (1) சரத்து நீக்கப்பட்டு 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 70 (1) சரத்திற்கு இணங்க நான்கரை வருடங்கள் கடக்கும் வரையில் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது எனவும் பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனை 3/2 பெரும்பான்மையினரால் ஆதரிக்கப்படும் பட்சத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

வாக்குரிமையானது நாட்டு பிரஜைகளுக்குள்ள அதியுண்ணத கௌரவத்தை எடுத்துக் காட்டுவதாக, இலங்கை அரசியலமைப்பு, பாராளுமன்றத்திற்கு அல்லாது, பொதுமக்களுக்கே உயர்ந்த கௌரவத்தை கொடுத்துள்ளது. எதுவித தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காரணங்களும் இல்லாமல் நாட்டின் தலைவர் பாராளுமன்றத்தை கலைக்க மாட்டார். 

பிரான்ஸ் போன்ற நாடுகளில் நிலவும் ஜனநாயக வழிமுறைகளை இலங்கை ஒரு பாடமாக கற்றுக் கொள்ளலாம். இலங்கையில் மட்டுமே சில அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தல் ஒன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

இது துரதிஷ்டமான நிலைமையாகும். பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பில் எதுவித ஏற்பாடுகளும் இல்லையென்று ஐக்கிய தேசிய கட்சி கூறும் கருத்துக்களை பிரதமர் முற்றாக நிராகரித்தார். 

இதுவிடயம் குறித்து ஏதேனும் கட்டுப்பாடுகள் சமகாலத்தில் நிலவுமானால் அது பாராளுமன்ற பாரம்பரியங்களுக்கு எதிரானவையாகும் பொதுமக்களின் கருத்து, பாராளுமன்றத்தின் கருத்தை விட வேறுபட்டு காணப்படுகிறது என ஜனாதிபதி கருதும் பட்சத்தில் பாராளுமன்றத்தை அவரால் கலைக்க முடியும்.

உலக நாடுகளில் பேணப்படும் ஜனநாயக வழிமுறைகளை இதற்கு உதாரணங்களாக எடுத்துக் காட்டலாம். உலகில் பெயரளவு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்ட நாடுகளில் கூட அவசர காலங்களில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் உள்ளதாகவும் ஆனால் இலங்கையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதற்கான அதிகாரமில்லை என்பது துரதிஷ்டவசமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment