மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டிற்கான பாடங்களை பகுதி நேரமாக ஆரம்பத்திருக்கும் சில பணம் திண்ணிகள் மாணவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ளாமல் செயற்படுகின்றனர்.
ஒரு வருடத்தில் மூன்றாம் தவணை பரீட்சையின் பின்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது அவர்களின் மனோநிலையை சமப்படுத்துவதற்காகும். 11 மாதங்கள் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்ட அவர்கள் ஒரு மாதகாலம் படிப்பினை தவிர்ந்த விளையாட்டு, சுற்றுலா போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தங்கள் மனங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள விடுமுறை வழங்கப்படுகிறது.
ஒரு மாணவனின் தொடர்கல்வியினால் அம் மாணவன் உளரீதியாக பாதிக்கபடுகிறான். அதிகளவான கல்விச் சுமைகளை சுமப்பதால் அவனது இயல்பு செயற்பாட்டு பாதிப்படைகிறது. சில பெற்றோரும் இதை விளங்கிக் கொள்ளாமல் அவர்களுக்கு தொடர்ச்சியான கல்வியை ஊட்ட முற்படுகின்றனர்.
அளவிற்கு மீறினால் அமுதம் கூட நஞ்சாகி போகும். ஒரு மாணவன் அவனினால் முடியுமான சுமையை மாத்திரமே சுமக்க முடியும். சுமைகள் அதிகரிக்கும் போது மனரீதியாக நாளுக்கு நாள் பாதிப்படைகின்றான். ஒரு மாத காலம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையை அவர்களுக்கு விரும்பிய வழியில் செலவளிக்க அனுமதி வழங்குங்கள்.
அதிகமாக இயற்கையை ரசிப்பதினால் மனம் அமைதியடைகிறது. விளையாடுவதன் மூலம் உடல் சுறுசுறுப்படைகிறது. வழங்கப்பட்ட விடுமுறையை அவர்களுக்கு விரும்பிய வழியில் கழிக்காமல் அடுத்த ஆண்டு பாடங்களை இன்றே கற்க அனுப்பாதீர்கள். சில பணம் திண்ணிகளின் குறிக்கோள் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதல்ல. அவர்கள் பணத்தினை மாத்திரம் இலக்காக கொண்டு செயற்படுகின்றனர்.
வழங்கப்பட்டிருக்கும் விடுமுறையை மீண்டும் கல்விக்காக பயன்படுத்தாமல் அவர்களுக்கு ஓய்வு காலமாக வழங்க பணம் திண்ணிகள் முன்வர வேண்டும். விடுமுறை கால பாடங்களிற்கு பெற்றோர் பிள்ளைகளை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அல்லது அக்கிராமங்களில் உள்ள பள்ளிவாசல்கள், கல்வி அமைப்புகள் பகுதி நேர வகுப்புகளிற்கு தடை விதியுங்கள்.
No comments:
Post a Comment