காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடனின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 2018 - News View

About Us

About Us

Breaking

Sunday, December 2, 2018

காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடனின் கலை நிகழ்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் - 2018

காத்தான்குடி பிஸ்மி கின்டர்காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வும், சான்றிதழ் வழங்கும் வைபவமும் 02.12.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை காத்தான்குடி விம்பிள்டன் ஆங்கிலப் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பிஸ்மி கின்டர்காடனின் பணிப்பாளர் மௌலவியா ஏ. எல் .எப். றிப்கா (இஸ்லாஹி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்புரி அமைச்சில் உள வளத்துணையாளராக பணியாற்றும் M . மனூஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 
இந்நிகழ்வில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி உட்பட பிஸ்மி குழுமத்தின் பணிப்பாளர்கள் ,உறுப்பினர்கள், புத்திஜீவிகள், கல்வியலாளர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் இந்நிகழ்வில் பிஸ்மி கின்டர்காடன் மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் கிராஅத், தேசிய கீதம், பிஸ்மி கீதம், தமிழ்ப் பாடல், சிங்களப்பாடல் ஆங்கிலப்பாடல், பிஸ்மி குட்டீஸ், ஆங்கில மொழியிலான அறிவுக்களஞ்சியம், வீதி ஒழுங்குகள் பற்றிய உரையாடல், பெற்றோரின் பொறுப்பு குறித்த நாடகம், சிறுவர் உணர்வுகளை மதித்தல் தொடர்பான விவாத அரங்கு, சாதனையின் சிகரங்கள் எனும் இலங்கை முஸ்லிம் ஆளுமைகளின் அறிமுக நிகழ்வு போன்ற பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. 
இந்நிகழ்வின் இறுதியில் பிஸ்மி கின்டர்காடனின் பாடநெறியைப் பூர்த்தி செய்த பாலர்களுக்கும் கற்பித்த ஆசிரியைகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு பற்றி கருத்துரைத்த அதிதிகள் பாலர்களின் நிகழ்வுகள் வழமையான பாலர் பாடசாலை நிகழ்வுகளை விட வித்தியாசமாக வடிவமைக்கப் பட்டிருந்ததாகவும் நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய கலை கலாசாரம் பிரதிபலித்ததாகவும் அமைந்திருந்தன எனவும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

S.சஜீத்

No comments:

Post a Comment