ஜனாதிபதி - ஐ.தே.மு. இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு! - மீண்டும் நாளை சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

ஜனாதிபதி - ஐ.தே.மு. இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு! - மீண்டும் நாளை சந்திப்பு

ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், மீண்டும் நாளை ஐக்கிய தேசிய முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொடரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில், ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறேசேனவிற்கும் இடையிலான, சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அலரி மாளிகையில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அரசியல் நெருக்கடி, அதற்கான தீர்வு குறித்து ஆராயப்பட்டுள்ளது. மிக நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தீர்வுகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளமையால் நாளை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இந்நிலையில் சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கையில், ”தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது. ஜனாதிபதியின் அழைப்பிற்கு இணங்க, ஐக்கிய தேசிய முன்னணி, மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டோம்.

இப்பொழுது பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்களை நாம் விரைவில் வெளிப்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment