மேற்கிந்தியத் தீவுகளுக்கான தலைமை பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்ததாக வெளியான தகவல் பொய்யானது - சந்திக்க ஹத்துருசிங்க - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

மேற்கிந்தியத் தீவுகளுக்கான தலைமை பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பித்ததாக வெளியான தகவல் பொய்யானது - சந்திக்க ஹத்துருசிங்க

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தலைமை பயிற்றுநர் பொறுப்புக்கு தாம் விண்ணப்பித்ததாக வெளியான தகவல் பொய்யானது என இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்குத் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் தலைமை பயிற்றுநர் பொறுப்புக்கு விண்ணப்பித்ததாக வெளியான தகவலை சந்திக்க, ஹத்துருசிங்க நிராகரித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என அவர் தமக்குத் தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தாம் தொடர்ந்தும் இலங்கை அணியுடன் இணைந்து பணியாற்றுவதாக சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க மேற்கிந்தியத் தீவுகளின் தலைமை பயிற்றுநர் பொறுப்புக்கு விண்ணப்பித்துள்ளதாக Cricket Age இணையத்தளம் கடந்த இரு நாட்ளுக்கு முன்னர் செய்தி ​வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment