சிறுநீரக நோயாளியின் சிகிச்சைக்காக அமைப்பாளர் HMM.றியாழ் நிதியுதவி - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

சிறுநீரக நோயாளியின் சிகிச்சைக்காக அமைப்பாளர் HMM.றியாழ் நிதியுதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும், பிரபல செரண்டிப் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான HMM.றியாழ் அவர்களின் சொந்த நிதியிலிருந்து மற்றுமொரு சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியின் சிகிச்சைக்காக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் மற்றும் மாவடிச்சேனை ஜும்ஆப்பள்ளிவாயல் செயலாளர் எம்.எம்.அமீர் ஆகியோர் அமைப்பாளர் HMM.றியாழிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, மீராவோடையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காகவும் அமைப்பாளர் நிதியுதவி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மண்ணோடை முஹம்மது பயாஸ் 

No comments:

Post a Comment