உரிமைகள் இழந்த அல்லது அரசியல் அநாதையாக்கப்பட்ட ஒரு சிறுபான்மை சமூகம் தங்களது உரிமையை பெற்றுக்கொள்வதற்காக பல வழிமுறைகளில் போராட்டங்களை மேற்கொள்வார்கள்.
முதலில் வன்முறையற்ற அரசியல் ரீதியிலான சாத்வீக போராட்டங்களை மேற்கொள்வார்கள். அப்போராட்டம் ஆட்சியாளர்களின் இராணுவ பலம் கொண்டு நசுக்கப்பட்டால், அதற்கெதிரான வண்முறை சார்ந்த ஆயுதப்போராட்டம் மூலம் தங்களது உரிமைக்காக போராடுவார்கள்.
இந்த இரண்டு வழிமுறைகளிலும் போராடுகின்றவர்களை போராளிகள் என்றே அழைக்கப்படுவர். இதுதான் உலக நடைமுறை. மாறாக ஆயுதம் தூக்கி போராடுகின்றவர்களை மட்டும் போராளிகள் என்று அழைப்பதில்லை.
இந்திய சுதந்திர போராட்டத்துக்காக காந்தியினதும், நேத்தாச்சியினதும் போராட்ட பாதைகள் வேறுபட்டாலும், அவர்களது இரு வேறுபட்ட வழிமுறைகளும் போராட்டமாகவே பதியப்பட்டுள்ளது.
அந்தவகையில் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமையினை பெற்றுக்கொள்வதற்காக பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களினால் மு. கா தோற்றுவிக்கப்பட்டு அதற்காக மக்கள் ஆதரவினை கோரியபோது, பேரினவாத சக்திகளின் முகவர்களினால் அவர் அடைந்த துன்பங்கள் கொஞ்சமல்ல. அதனாலேயே மு. கா தொண்டர்கள் போராளிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்த போராட்டம் அன்றைய தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனையும் விட அதிகமாக இன்றைய தலைவர் ரவுப் ஹகீம் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பாரிய சவால்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும் மத்தியில் இன்றுவரைக்கும் போராட்டம் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
அன்றைய தலைவர் எதிரிகளுடன் மட்டும் போராடினார். அன்று துரோகிகள் மலிந்து காணப்படவில்லை. ஆனால் இன்றைய தலைவர் எதிரிகளுடனும், துரோகிகளுடனும் போராடுவதுடன், எதிரிகளைவிட துரோகிகளே இன்று அதிகமாக காணப்படுகின்றார்கள்.
முஸ்லிம் காங்கிரசின் இந்த போராட்டத்தில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி உண்மையாக போராடுகின்ற போராளிகளும் உள்ளார்கள்.
மறுபுறத்தில் போராளி என்று மக்கள் மத்தியில் வேசமிட்டுகொண்டு பணம், பதவி, அதிகாரம் போன்றவற்றை அனுபவிப்பதற்கென்று ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கின்றது.
இவ்வாறானவர்கள் தலைவரை நேரில் காண்கின்றபோது முகஸ்துதி பாடுவதுடன், தலைவரை முகத்துக்கு முன்பு புகழ்ந்து பேசுவார்கள்.
இவ்வாறு முகஸ்துதி பாடுபவர்கள் எப்போதும் முதுகுக்குபின்னால் குத்துபவர்கள் என்பதனை நாங்கள் கணிக்க தவறுகின்றோம்.
எனவே துரோகிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதென்றால் முதலில் முகஸ்துதி பாடுகின்றவர்களிடமிருந்து நங்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
அவர்களே இறுதியில் துரோகிகளாக மாறுபவர்கள். எமது சமூகத்தின் உரிமை போராட்டத்துக்கும் தடையாக இருப்பவர்களும் இவர்களே.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments:
Post a Comment