சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒரு தொகை சிகரட்டுடன் இருவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒரு தொகை சிகரட்டுடன் இருவர் கைது

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த ஒருதொகை சிகரட்டுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார். 

அவர்கள் இன்று (04) அதிகாலை 05.00 மணியளவில் குவைட்டில் இருந்து டுபாய் ஊடாக குவைட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான KU 341 என்ற விமானத்தில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 

அவர்களின் பயணப் பொதியில் இருந்து 266 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 53,200 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 2,660,000 ரூபாய் என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment