ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன் மூவர் கைது

கிளிநொச்சியில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகை கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருந்த மூன்று பேர் இன்று (04) வவுனியா மாவட்ட விஷத்தன்மையுடைய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வேன் ஒன்றில் கேரளா கஞ்சாவை எடுத்துச் சென்று கொண்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின்படி நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். 

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 07 கிலோவும் 900 கிராம் நிறையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. 

சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும் கின்னியா பிரதேசங்களை சேர்ந்த 28 மற்றும் 30 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment