இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பங்குபற்றும் ஐந்தாவது சுற்று பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

இலங்கை, பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பங்குபற்றும் ஐந்தாவது சுற்று பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில்

இலங்கை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பங்குபற்றும் ஐந்தாவது சுற்று பாதுகாப்பு பேச்சுவார்த்தை நேற்று (03) கொழும்பில் இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) இக்ராம் உல் ஹக் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நேற்றுக் காலை தொடக்கம் முழுநாள் நான்கு அமர்வுகளாக நடைபெற்ற இரு தரப்பு பாதுகாப்பு பேச்சுவாரத்தையின் போது இரு நாட்டு இராணுவ, கடற்படை மற்றும் விமான படைகளுக்கிடையிலான பரஸ்பர ஒன்றிணைந்த செயற்பாடுகள், ஒத்துழைப்புக்கள் தொடர்பாக இரு நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினாலும் விரிவாக ஆராயப்பட்டன.

இலங்கை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் பங்குபற்றும் ஐந்தாவது சுற்று பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றும் பொருட்டு கடந்த 2ஆம் திகதி இலங்கை வருகை தந்த பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) இக்ராம் உல் ஹக் தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர் நாளை 5ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இதேவேளை இரு நாட்டு பாதுகாப்புச் செயலாளர்களுக்கும் இடையிலான பிரத்தியேக சந்திப்பு ஒன்றும் பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக் காலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

No comments:

Post a Comment