கெபித்திகொழ்ழேவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட போகஸ்வெவ கிராம மக்களின் நீர், காணி மற்றும் வீடு சம்மந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது அப்பிரதேச மக்களுக்கும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானுக்கும் இடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வீட்டுத்திட்ட அமைச்சின் அனுராதபுர மாவட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இன, மத, பேதங்களுக்கு அப்பால் அனைவரினதும் தேவைகளை கேட்டறிந்து தனது வருடாந்த பண்முகப்படுத்தப்பட்ட நிதிகளிலும், தனது சொந்த நிதிகளிலும் பல்வேறுபட்ட மக்கள் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களையும். வாழ்வாதார உதவிகளையும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் மேற்கொண்டு வருகின்றார்.
ஐ.எம்.மிதுன் கான்
No comments:
Post a Comment