தனது வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதாக கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை​ - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 3, 2018

தனது வங்கிக் கணக்கை முடக்கியிருப்பதாக கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை​

வெளிநாட்டிலிருந்து 150 மில்லியன் ரூபா நிதி வைப்புச் செய்யப்பட்டதனால் தனது வங்கிக் கணக்கை மத்திய வங்கி முடக்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை​யென அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

இணையத்தளமொன்றில் வெளியாகியிருக்கும் மேற்படி செய்தியில் தனது புகைப் படத்தை காட்சிபடுத்தியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காடிய அமைச்சர் உடனடி விசாரணை நடத்தி இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுகொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று (03) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள், அமைச்சர் ஒருவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்ட சம்பவத்துக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் முகமாகவே அமைச்சர் இவ்வாறு விளக்கமளித்தார்.

அமைச்சர் ஒருவரது வங்கிக் கணக்கு மத்திய வங்கியால் முடக்கப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் செய்திக்கு என்னுடைய படத்தை பிரசுரித்திருப்பது நியாயமற்றது. எனக்கும் இச்சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது எனது நற்பெயருக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் களங்கம்," என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஓரிருவர் செய்யும் வேலைகளால் பாராளுமன்றத்தின் 225 பேரும் சமூகத்துக்கு பதிலளிக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியலுக்கு அப்பால் நான் ஒரு வர்த்தகர். என்னிடம் தெரிவிக்காமல் அல்லது நான் அறிவிக்காமல் இவ்வளவு பெரிய தொகை பணத்தை என் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்வதற்கு எனக்கு யாரும் இல்லையென்றும் அமைச்சர் நேற்று தனது மறுப்பை வெளியிட்டார்.

தகவலறியும் சட்டம் நடைமுறையிலிருப்பதனால் இந்த உண்மையை கண்டறியும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறதென்றும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment