அல்முஸ்லிமாத் ஆதரவில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 4, 2018

அல்முஸ்லிமாத் ஆதரவில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றிய நீதியரசா் சலிம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அகியோா்கள் நீதியமைச்சுக்குச் சமா்ப்பித்த அறிக்கைகளின் வித்தியாசமான சரத்துக்கள் பற்றி அறிவுறுத்தும் நிகழ்வொன்று அல்முஸ்லிமாத் ஆதரவுடன் டொக்டா மரினா றிபாய் தலைமையில் கடந்த (29) சனிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் குயின்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது..

இந்நிகழ்வில் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சுமார் 110க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் கலந்து கொண்டனா். இத்தெளிவூட்டலின் பின்னா் தான் இந்த அறிக்கைகள், முஸ்லிம் விவாவ விவகரத்துச்சட்டம் மற்றும் இஸ்லாமியச் சட்டங்கள், முஸ்லிம் சட்டங்கள் பற்றி அறிந்து கொண்டதாகவும், அங்கு சமூகமளித்திருந்த பெண்கள் தெரிவித்தனா்.
இதுவரை இவ்வறிக்கை மற்றும் பசஹ், மத்தபஹ், வலி, கைக்கூலி, பலதார திருமணம், தலாக், பதிவு, கல்யாண வயது, பெண் காதி, ஜூரி, மத்தாஹ், இத்தாஹ் இருத்தல். இந்த நாட்டில் பதவி வகிக்கின்ற 65 காதி நீதி மன்றங்கள் உள்ளன என்பன பற்றியும், அவா்களுக்கு மாதாந்தம் வழங்கப்படுகின்ற 16 ஆயிரம் ரூபா சம்பளம், 1952ஆம் ஆண்டு இயற்றிய சட்டம் போன்ற விடயங்களை இன்று தான் இந்த அறிக்கையினை ஆராய்ந்த போதே தாங்கள் அறிந்து கொண்டதாகவும் பங்குபற்றியவா்கள் தெரிவித்தாா்கள்.

அல்முஸ்லிமாத் தலைவி ஹம்சியா சகீட் (தலைவி) கைருநிஸா (செயலாளா்) பேச்சாளா் கைருநிசா செய்யத் அபூபக்கா் ஆகியோரும் பிரதான மேடையில் அமா்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

அஷ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment