துருக்கி நாட்டின் உதவித்திட்டமான (TIKA -Turkish Cooperation and Coordination Agency) பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்திற்கு (3 டி) டிஜிட்டல் பிரிண்டரொன்றை அன்பளிப்புச் செய்ததுள்ளது. இவ்வைபவம் கடந்த 02.10.2018ம் கொழும்பு துருக்கித்துாதரகத்தில் நடைபெற்றது.
துருக்கி நாட்டின் இலக்கைக்கான துாதுவா் துன்கா ஒக்கந்தா், பேராதெனிய பல்கலைக்கழகத்தின் விவசாயபீட பீடாதிபதி பேராசிரியா் காமினி புஸ்பக்குமாரவிடம் இவ்வியந்திரத்தினைக் கையளித்தாா் மற்றும் பீடத்தின் தலைவா் பேராசிரியா் மவ்ஜூட், பேராசிரியா் பத்மராஜாவும் இவ்வைபத்தில் கலந்து கொண்டனா்.
இங்கு கருத்துத்தெரிவித்த துருக்கியத்துாதுவா், துருக்கி நாடு இலங்கைக்கு சுனாமி ஏற்பட்ட காலத்திலிருந்து மனிதபிமான உதவிகளை அவ்வப்போது செய்து வருகின்றது. துருக்கி உதவித்திட்டம் உலகிலுள்ள பல்வேறு நாடுகளில் இயற்கை அனா்த்தம் மற்றும் உதவிகளை உணவு, சுகாதாரம், வாழ்வாதாரங்கள் எனப்பல துறையில் வழங்கி வருகின்றது.
2017ஆம் ஆண்டும் மட்டும் உலகிலுள்ள நாடுகளுக்கு 8 பில்லியன் டொலா்களை திக்கா எனும் சர்வதேச தொண்டு நிறுவனத்தினூடாக துருக்கி உதவியுள்ளது. இலங்கையில் பொருளாதார, இளைஞா் கல்வி, சுகாதாரம் மற்றும் ஊடகம் போன்ற துறைகளுக்கு தொடா்ந்தும் துருக்கி உதவி வருவதையும் தூதுவா் குறிப்பிட்டாா்.
பேராதெனியா பல்கலைக்கழகம் சாா்பாக துருக்கி நாட்டுக்கும் துாதுவருக்கும் பீடாதிபதி காமினி நன்றி தெரிவித்தாா்.
அஷ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment