சம்பள கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Monday, October 1, 2018

சம்பள கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி நல்லதண்ணி, மறே தோட்ட மக்கள் இன்று (01) காலை மறே தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஒப்பாரி பாடலோடு, கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடத்தினர்.

தோட்ட தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் கடந்த முறை போல் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றாமல் இம்முறை நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், தோட்டதொழிலாளர்களின் சம்பள விடயத்தில் கூட்டு ஒப்பந்தததில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சிவார்த்தையினை நடாத்தி இம்முறை எங்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டுமென ஆரபாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 250 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு, தற்பொழுது தோட்ட தொழிலாளர்களாகிய எங்களுக்கு கொடுப்பனவு எல்லாவற்றையும் சேர்த்து ரூபா 730 வழங்கபடுகிறது.

ஆனால் நாட்டில் இன்று காணப்படுகின்ற விலை ஏற்றத்திற்கு மத்தியில் இந்த சம்பளம் எங்களுக்கு போதாது. ஆகவே எங்களுக்கு இம்முறை ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக சம்பந்தபட்டவர்கள் பெற்றுதர வேண்டுமெனவும் கோரிகை விடுத்தனர்

ஆர்பாட்டத்தின் போது மறே தேயிலை தொழிற்சாலையில் இருந்து மறே பொரஸ்ட் சந்தி வரை பேரணியாக சென்ற ஆர்பாட்டகாரர்கள் தோட்ட முகாமையாளர் தினுஅபேகோன் அவர்களை சந்தித்து மனு ஒன்றையும் கையளித்தனர். அதன் பிறகு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

கே. கிரிஷாந்தன்

No comments:

Post a Comment