RTI தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் தேசிய ரீதியில் இடம்பெற்ற விவாதப்போட்டியில் தமிழ்ப்பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த போட்டி அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் தகவல் அறியும் சட்டம் திறன்மிக்கதாக இணைத்துக்கொள்ளமுடிவது பொதுநோக்கத்திற்காகவே என்று குருநாகல் கிக்குலுகல மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும், தகவல் அறியும் சட்டம் திறன்மிக்கதாக இணைத்துக்கொள்ள முடிவது தனிநபரின் நோக்கத்திற்காகவே என்னும் தலைப்பில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்களும் விவாதித்தனர்.
இறுதியில் யாழ் இந்துக்கல்லூரி மாணவர்கள் அதிகூடியபுள்ளிகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment