ஓய்வூதியக்காரர்களுக்கென இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் விசேட சலுகைகள் தொடர்பான பிரேரணை உள்ளடக்கப்படவுள்ளது ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் இதுதொடர்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
.2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஓய்வூதியக்காரர்களின் நலன் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஓய்வூதியக் கொடுப்பனவு வழிமுறை குறித்த யோசனைகள் இணையத்தளத்தின் ஊடாக பிரசுரிக்கப்பட்டிருந்தன.
இதற்கான கருத்துக்களை வழங்கும் கால எல்லை அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதியக் கொடுப்பனவு தினம் அடுத்த மாதம் 8ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு பிரதேச மட்டத்தில் பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்றும் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment