ESOFT இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் எம்.எம்.நவாஸ் ஆசிரியருக்கு கெளரவம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

ESOFT இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் எம்.எம்.நவாஸ் ஆசிரியருக்கு கெளரவம்

ESOFT Metro Campus இன் 9வது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் (9th Diploma Awarding Ceremony) எகோ (Education & Career Guidance Organization -ECGO) அமைப்பின் தலைவரும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் கணித, விஞ்ஞானப்பிரிவுப் பொறுப்பாளருமான எம்.எம்.நவாஸ் ஆசிரியர் நினைவுச்சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

ESOFT Metro Campus இன் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் கடந்த 01.09.2018ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இடம்பெற்ற நிகழ்வில் ESOFT Metro Campus இன் மட்டக்களப்பு (400 மாணவர்கள்), கல்முனை (100 மாணவர்கள்) க்கிளைகளில் பாடநெறிகளை முடித்துக்கொண்ட 500 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

எகோ நிறுவனம் ESOFT Metro Campus உடன் இணைந்து பல்வேறுபட்ட பாடநெறிகளை ஓட்டமாவடி பிரதேசத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், மாணவர்களுக்கான சரியான தொழில் வழிகாட்டல்களை வழங்கி சிறப்பாக இயங்கி வருவதைக் கெளரவிக்குமுகமாக எம்.எம்.நவாஸ் ஆசிரியருக்கு ESOFT Metro Campus இன் 9வது டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் அதிதிகளில் ஒருவராக அழைத்து நினைச்சின்னம் வழங்கிக் கெளரவித்துள்ளது.

thehotline.lk

No comments:

Post a Comment