மாவடிச்சேனைக்கு புதிய கிராம சேவகர் நியமனம் : மு.கா. பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூரின் முயற்சிக்கு வெற்றி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

மாவடிச்சேனைக்கு புதிய கிராம சேவகர் நியமனம் : மு.கா. பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூரின் முயற்சிக்கு வெற்றி

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாவடிச்சேனை கிராமத்தில் நீண்ட காலமாக கிராம சேவகராக கடமை புரிந்த கிராம சேவகர் ஜவ்பர் அவர்கள் இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்த நிலையில், இக்கிராமத்தில் பதில் கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.

தற்போது புதிய கிராம சேவகர் நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மாவடிச்சேனை கிராமத்திற்கான கிராம சேவகராக ஒரு ஆண் நியமிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை ஊர் முக்கியஸ்தர்களாலும், பொது மக்களாலும் முஸ்லிம் காங்கிரஸ் மாவடிச்சேனை, செம்மண்ணோடை வட்டார பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்களிடம் முன்வைக்கப்பட்டது இக்கோரிக்கைக்கமைவாக நேற்று (03) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரைச் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.

மாவடிச்சேனை கிராமம் எல்லைக்கிராமமாக இருப்பதனால் எல்லைப்பிரச்சனைகளை அடிக்கடி எதிர்நோக்கி வருவதாலும், மழை காலங்களில் வெள்ள அனர்த்தங்களுக்கும் உட்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இக்கிராமத்தில் காணப்படுவதாலும் கிராமத்திற்கு சேவை செய்வதற்கு ஒரு ஆண் கிராம சேவகரின் தேவை அத்தியாவசியமாக உணரப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரிடம் பிரதேச சபை உறுப்பினர் கபூர் சுட்டிக்காட்டினார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்திற்கு உடனடியாக ஆண் கிராம சேவகர் ஒருவரை நியமிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

இச்சந்திப்பில் மு.கா.பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூருடன் முன்னாள் மு.கா.பிரதேச சபை உறுப்பினரும், மாவடிச்சேனை ஜும்ஆப்பள்ளிவாயல் செயலாளருமான எம்.எம்.எம்.அமீர் மற்றும் பட்டியல் வேட்பாளர் யூ.சுபைதா, மு.கா.முக்கிய செயற்பாட்டாளர் எம்.என்.எம்.யஸீர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

எம்.வை.எம். பயாஸ்
செம்மண்ணோடை

No comments:

Post a Comment