க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை இம்மாதம் 15ம் திகதிக்கு முன்னர் தபாலில் சேர்க்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை விநியோகத்தில் சுமார் 99 வீதமான பணிகள் பூர்த்தி அடைந்திருப்பதாக ஆட்பதிவு ஆணையாளர் ஹர்ஷ இலுப்பிட்டிய தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண பரீட்சையின் பிரயோக செயன்முறை பரீட்சை ஒக்டோபர் மாதம் இடம்பெறும். எனவே அந்தக் காலப்பகுதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகள் அனைத்தும் உரிய பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேலேளை செப்டெம்பர் 01 முதல் தேசிய அடையாள அட்டைகளுக்கு புதிதாக கட்டணம் ஒன்று அறிவிடப்படும். புதிய அடையாள அட்டைகளுக்கு 100 ரூபாவும் மாற்றத்திற்கு உட்பட்ட அடையாள அட்டைகளுக்கு 250 ரூபாவும் அறிவிடப்படும். தொலைந்த தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை ஒன்றை பெறுவதற்கு 500 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும் திரு.இலுப்பிட்டிய மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment