எமது நாட்டில் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு காணப்படுவதாக முதற்கட்ட ஆய்வின் போது நிரூபனமாகியுள்ளதால் அதனை உறுதிசெய்வதற்கான மேலதிக ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் பெறுபேறுகள் எமக்கு மகிழ்ச்சியை தரும் என்று பெற்றோலிய வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பி.ஜி.பி பைனீயர் என்ற ஆய்வுக் கப்பலை வரவேற்கும் முகமாக நேற்று (02) கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பேசும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு கிழக்கு கடல் பகுதியை மையப்படுத்தி எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் பற்றி ஆய்வு மேற்கொள்ள பி.ஜி.பி பயனீயர் என்ற ஆய்வுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் இந்த ஆய்வுப் பணிகள் மந்தகதியிலேயே இடம்பெற்றது. தற்போது நாம் இந்த ஆய்வுப்பணிகளை துரிதப்படுத்தவும் புதிய எண்ணெய் வளங்களை கண்டறியவும் தரவுகளை சேகரிக்கவும் உள்ளோம். இந்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானத்தை கடந்த ஆண்டு மே மாதம் எடுத்திருந்தோம்.
எம்மால் இந்த ஓப்பந்தத்தை குறுகிய காலப்பகுதிக்குள் மேற்கொள்ள முடிந்தது. அதன் பயனாக பி.ஜி.பி பயணியர் என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் வந்துள்ளது. இந்த ஆய்வுக் கப்பிலினால் இருபரிமாண அளவில் ஆய்வுத் தரவுகளை 18 மாதங்களுக்குள் கேசரித்து தரமுடியும்' என்றும் தெரிவித்தார்.
பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தினால் மூன்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மன்னார் கடற்பரப்பில், காவேரி மற்றும் லங்கா ஆகிய கடற்பரப்பில் (வலயங்களில்) ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
மன்னார் வலயம் எம்- 01 இருந்து எம்- 10, காவேரி வலயம் சீ-01 இருந்து சீ05, லங்கா வலயத்தில் ஜேஎஸ்- 01 இருந்து ஜேஎஸ்- 06 வரை ஆகும். தற்போது இந்த ஆய்வுக்கப்பல் தனது முதற்கட்ட பணிகளை லங்கா வலயத்தில் ஜேஎஸ்-01 இருந்து ஜேஎஸ்-06 வலயத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
தினகரன்
No comments:
Post a Comment