வாழைச்சேனை பிரதேச சபை உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் சபைக்குள் கொட்டவேண்டி வரும் பொதுமக்கள் சூளுரை - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

வாழைச்சேனை பிரதேச சபை உடனடியாக குப்பைகளை அகற்றாவிட்டால் சபைக்குள் கொட்டவேண்டி வரும் பொதுமக்கள் சூளுரை

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளை அப்பிரதேச சபை அகற்றாததினால் அப்பிரதேசத்தில் சேர்ந்துள்ள குப்பைகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து இன்று 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபைக்கு முன்பாகக் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பிரதேச சபையினால் அகற்றப்பட்டு வந்த குப்பைகள் சில நாட்களாக அகற்றப்படாமையினால் அப்பிரதேசங்களில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதாகவும், டெங்கு பெருகுவதாகவும் மக்கள் குற்றம்சாற்றியுள்ளார். குறிப்பாக பாடசாலைகள், பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றில் குப்பைகள் நிரம்பிக் காணப்படுவதாகவும் இதனால் அப் பிரதேசம் அசுத்தமடைந்து காணப்படுவதாகவும் இன்று போராட்டத்தில் கலந்து கொண்டோர்கள் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேச சபையினால் இதுவரை காலமும் குப்பைகளை கொட்டிவந்த இடத்தில் இனிமேல் குப்பைகளை கொட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டதன் காரணத்தால் இவ்வாறான சிக்கல்கள் தோன்றியுள்ளது.

எனவே அவசரமாக பிரதேச சபை இப் பிரச்சினை தொடர்பாக அதிதீவிரமாக சிறந்த முடிவெடுத்து பிரதேசங்களில் சேர்ந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த முன்வரவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளதோடு, தவறும் பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் பிரதேசத்தில் சேரும் குப்பைகள் அனைத்தையும் குறித்த பிரதேச சபைக்குள் கொட்டவேண்டி வரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment