குப்பைகளை அகற்றி மக்களைப் பாதுகாக்க உதவுங்கள் - பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

குப்பைகளை அகற்றி மக்களைப் பாதுகாக்க உதவுங்கள் - பிரதேச சபை உறுப்பினர் அஸ்மி

மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று - வாழைச்சேனை பிரதேச சபை எல்லையில் அகற்றப்படாமல் தேங்கி வரும் குப்பைகளை உடனடியாக அகற்றி இப்பிரதேச மக்களை உயிர்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுமாறு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றுமுன்தினம் 28.09.2018ம் திகதி இடம்பெற்ற கோறளைப்பற்று பிரதேச செயல அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டு தீர்வினை வழங்க வேண்டுமெனக்கோரி தனது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினைக் கையளித்திருந்ததுடன், எதிர்வரும் 02.10.2018ம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இதற்கான தீர்வுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது காலவரையும் கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குப்பைகள் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சூடுபத்தினசேனையில் அமைந்துள்ள திண்மைக்கழிவுகள் சேகரிக்கும் நிலையத்தில் கொட்டப்பட்டு வந்த நிலையில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத்தவிசாளரினால் தடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பிரதேசத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், இதனால் பாரிய சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்பட்டு பிரதேச உயிரச்சுறுத்தல் நோய்கள் தாக்கவும் வாய்ப்புள்ளது.

இப்பிரதேசத்தில் காணப்படும் கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு, மேற்கு என மூன்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் சேரும் குப்பைகளிலிருந்து சேதனப்பசளை தயாரிக்கும் நோக்கில் சூடுபத்தினசேனையில் அமையப்பெற்றுள்ள நிலையம் மூன்று பிரதேச சபைகளுக்கும் உரித்தானது.

ஆகவே, மனிதாபிமான அடிப்படையில் இரு பிரதேச சபைத்தவிசாளர்களும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு இதற்கான தீர்வினைப் பெற்று இப்பிரதேசத்தில் நாளாந்தம் தேங்கி வரும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அக்கோரிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்.எம்.அஸ்கர் அலி 

No comments:

Post a Comment