பிரதியமைச்சர் மௌலானாவின் முயற்சியில் ஏறாவூர் அலிகாருக்கு தொழிநுட்ப பீடக்கட்டடம் : நவீன வசதிகளுடன் கேட்போர் கூடமும் அபிவிருத்தி - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

பிரதியமைச்சர் மௌலானாவின் முயற்சியில் ஏறாவூர் அலிகாருக்கு தொழிநுட்ப பீடக்கட்டடம் : நவீன வசதிகளுடன் கேட்போர் கூடமும் அபிவிருத்தி

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா மேற்கொண்ட அயராத முயற்சியின் பலனாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலத்திற்கு உட்பட்ட ஏறாவூரின் பிரதான பாடசாலைகளில் ஒன்றான ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் தொழிநுட்பபீடக் கட்டட நிர்மாணத்திற்காக நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்படும் “அருகிலுள்ள பாடசாலை - சிறந்த பாடசாலை செயற்றிட்டத்தினூடாக குறித்த தொழிநுட்பபீடக் கட்டட நிர்மாணத்திற்காக பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சியினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் திட்டப்பணிப்பாளரினால் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த காலத்தில் பிரதியமைச்சர் அவர்களின் அயராத முயற்சியினால் அலிகார் தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்திலே 750 சொகுசு இருக்கைகள் மற்றும் 100 விருந்தினர் இருக்கைகளோடு, நவீ்ன வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி செய்வதற்காகவும் பிரதியமைச்சரின் முயற்சியினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான கேள்விப்பத்திரமும் தற்போது கோரப்பட்டுள்ளது.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையை தரமுயர்த்தியது முதல் அங்கு பௌதீக, மனித வளங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் அமைச்சரின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்டதுடன், பாடசாலைக்காக பொலிஸ் காணியைப் பெற்றுக்கொடுக்கவும் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா தனது தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் செய்தியாளர்

No comments:

Post a Comment