கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணனின் 30 வருட அரசியல் அனுபவம் மற்றும் 14 வருடங்கள் கல்விக்கு அவர் ஆற்றிய சேவைக்காக அண்மையில் இங்கிலாந்தில் கலாநிதி பட்டம் வழங்கபட்டது.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு தமிழ் சங்கத்தில் இதனை முன்னிட்டு பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (03) இடம்பெற்றது.
இலங்கை இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்களின் நல்லாசியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து நினைவு சின்னங்களும் வழங்கி கௌரவித்தனர்.
உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் துணைத்தவைவர் கே.செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உலக தழிழ் பண்பாட்டு இயக்க சர்வதேச கிளைகளுக்கான ஒருங்கிணைப்பபளர் இ.இராஜசூரிய மற்றும் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன¸ கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எஸ்.தில்லை நடராஜா கல்வி அமைச்சின் அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்ட பணிப்பாளர் கந்தையா பத்மநாதன் மீன்பிடித்துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் வைத்திய கலாநிதி கவிஞர் அல்காஜ் ஜின்னாஹ் ரிபுத்தீன் உள்ளிட்ட கொழும்பு வாழ் நகர வர்த்தகர்கள்¸ கல்வியாளர்கள¸ புத்திஜீவிகள் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment