புகையிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான 12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்குபற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் ஆறு மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுக்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்த நிகழ்வு இடம்பெற்றது.
'ஆரோக்கியமான தலைமுறையின் பேண்தகு அபிவிருத்திக்கு புகையிலை கட்டுப்பாடு' என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டம்பர் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இந்தோனேஷியாவின் பாலி நகரில் இம்மாநாடு நடைபெறவுள்ளது.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் எம்.ஜீ.பீ. ஹர்ஷ மதுஷங்க, டபிள்யு.எம். அசிங்சலா மதுமாலி, பீ.கே. நிமேஷா துலாஞ்ஜலீ, ஆர்.எம். சமன் குமார, டபிள்யு.எம்.ஆர்.ஏ. வன்னிநாயக்க, பீ.ஏ. நிலுஷிகா மதுபாஷினி ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இம்மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் ஆசியையும் தெரிவித்த ஜனாதிபதி, இதன்போது பரிசில்களும் வழங்கினார்.



No comments:
Post a Comment