ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தோளபீக்கின் முயற்சியின் பயனாக கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியில் கடந்த வருடம் 20 பேர்ச் அளவிலான காணியை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு இனங்கியிருந்தது.
ஆனால் பள்ளிவாசலுக்குரிய காணி மொத்தமாக 134 பேர்ச் காணப்படுகின்றது. மிகுதி காணியையும் விடுவிப்பது சம்மந்தமாக இன்று (28) பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. ராஜபக்ஸ அவர்களை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தோளபீக் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அடுத்த கட்ட பேச்சுவார்தை இரானுவ தலைமையகத்தில் காணிப் பிரிவுக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரிகேடியர் சந்திரசேகரோடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதிக்கு பிறகு பேசுவதற்கும் தீர்மானிக்கப்ட்டிருக்கிறது.
இச் சந்திப்பின்போது முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பஸீர், கருமலையூற்று ஜும்ஆப் பள்ளிவாசல தலைவர் ஆசாத், செயலாளர் சுபைர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment