காபட் வீதியாகும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி - News View

About Us

About Us

Breaking

Friday, September 28, 2018

காபட் வீதியாகும் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் 2 கோடி 11 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காபட் வீதி செப்பனிடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின், சம்மாந்துறை பிரதேச சபையின் கீழுள்ள அன்வர் இஸ்மாயில் மாவத்தை வீதி முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிரின் வேண்டுகோளுக்கினங்க அமைச்சரினால் நிதியொதுக்கப்பட்டது.

இவ்வீதி கைகாட்டி சந்தியிருந்து முகைதீன் மாவத்தை சந்தி வரையான சுமார் 1200 மீற்றர் வீதி காபட் வீதியாக செப்பனிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment