முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த 2012 நவம்பர் 09 ஆம் திகதி ஏற்பட்ட மோதலில் 27 கைதிகள் பலியான சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் இவ்வருடம் (2018) மார்ச் மாதம் CID யினால கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று (04) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்கள் இருவருக்கும், எதிர்வரும் செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை, விளக்கமறியலை நீடிப்பதற்கான உத்தரவை நீதவான் வழங்கினார்.
No comments:
Post a Comment