தென் மாகாண இ.போ.ச. பஸ் சேவை ஊழியர்கள் கடந்த நான்கு தினங்களாக, பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (03) இலங்கை போக்குவரத்து சபை தலைவர், ரமால் சிறிவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காத நிலையில், அவர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (04) பிற்பகல் 2.00 மணிக்கு போக்குவரத்து அமைச்சருடன் கொழும்பில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின், ஏனைய மாகாணங்களிலுள்ள இ.போ.ச. ஊழியர்களையும் இணைத்து, தங்களது பணிப்புறக்கணிப்பை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளவுள்ளதாக, இ.போ.ச. ஊழியர் சங்கத்தின் எல்பிட்டிய கிளையின் தலைவர் அநுர மெண்டிஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment