நாட்டின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்ததினமான நேற்று அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாலத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்க் செயலாளர் நாயகம் அலுவலகத்திற்கு நேற்றைய முன் தினம் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது சார்க் அமைப்பின் செயலாளர் அம்ஜாட் ஹூசைன் அவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்துள்ளார்.
இதனை நேற்றைய தினம் செய்தியாக பிரசுரித்த குறித்த பத்திரிகையில் ஜனாதிபதியின் பெயர் மைத்திரிபால சிறிசேன என்பதற்கு பதிலாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என பிரசுரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தனது 67ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், புகைப்படத்துடன் வெளியாகிய குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குறித்த செய்தி ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment