வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி குடும்பஸ்தர் பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதி குடும்பஸ்தர் பலி

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வீதியை கடக்க முயன்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டர் சைக்கிள் சாரதியான இளைஞர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (04) காலை 7.25 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கந்தசாமி கோவில் வீதியில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் வீதியை கடக்க முயன்ற வயோதிபர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய நடராஜா ஜனார்த்தனன் (27) படுகாயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் சூசைப்பிள்ளையார் குளத்தை சேர்ந்த பேரம்பலம் திருச்செல்வம் (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இது தொடர்பன மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment