பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு - News View

About Us

About Us

Breaking

Monday, September 3, 2018

பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

நேபாளத்தில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றியதன் பின்னர் அவ்வமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேபாளத்திற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று (02) இரவு நாடு திரும்பினார்.

இலங்கை தாய்நாட்டிற்கு சர்வதேசத்தில் கிடைக்கப்பெற்ற மற்றுமொரு முக்கிய வெற்றியாக பிம்ஸ்டெக் அமைப்பின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்று நாடு திரும்பிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக நேற்று இரவு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளித்து விசேட விருந்தினர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டhர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி பிரித் பாராயணமும் ஏனைய சமயக் கிரியைகளும் இடம்பெற்றன.

ஜனாதிபதியள வரவேற்பதற்காக அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
பிம்ஸ்டெக் அமைப்பின் நான்காவது அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள் கடந்த 29ஆம் திகதி நேபாளத்திற்கு பயணமானார். பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாடு பூட்டான் இந்தியா. மியன்மார் நேபாளம் இலங்கை, தாய்லாந்து ஆகிய தெற்காசிய தென்கிழக்காசிய ஏழு நாடுகளின் அரச தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 30, 31ஆம் திகதிகளில் நேபாளத்தில் காத்மண்டு நகரில் இடம்பெற்றது. 

அரச தலைவர்கள் மாநாட்டின் நிறைவில் அவ் அமைப்பின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நியமிக்கப்பட்டதுடன். ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியின் செயற்பாடுகள் பெரிதும் பாராட்டப்பட்டன.

புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன க்கு மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனுபவமும் முதிர்ச்சியும் வாய்ந்த அரசியல் தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தி்ன் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பின் பணிகள் பலமாக முன்னெடுக்கப்படும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர். 

அரச தலைவர்கள் மாநாட்டை தொடர்ந்து நேபாளத்தி்ற்கான இரண்டுநாள் அரச முறை பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி மற்றும் பிரதமர் கே.பீ.ஓலி ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இதன்போது இரண்டு நாடுகளுக்கிடையில் பொருளாதார சமூக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இளைஞர் மற்றும் அரச சேவை பயிற்சி நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவற்கான புதிய இரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
இந்த மாநாட்டுடன் இணைந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியன்மார் ஜனாதிபதி வின் மயின்ட் (றுin ஆலiவெ) ஆகியோருடன் ஜனாதிபதியுன் கலந்துரையாடினார். அதன்போது இலங்கையி்ன் பொருளாதாரஇ சமூக நடவடிக்கைகளை பலமாக முன்கொண்டு செல்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அத்தலைவர்கள் உறுதியளித்தனர்.

மேலும் நேபாளம் - இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்திலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதேநேரம் புத்த பெருமான் பிறந்த புனித பூமியான லும்பினி உள்ளிட்ட சமய ஸ்தலங்களுக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவினர் விஜயம் செய்தனர்.

நேபாளத்திற்கான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இலங்கை ஜனாதிபதியை கௌரவிக்கும் வகையில் காத்மண்டு நகரில் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதியள வழியனுப்புவதற்காக அந்நாட்டின் அமைச்சர்கள் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கடந்த சில வருடங்களாக இலங்கை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் இருந்துவந்த கறை படிந்த பக்கங்களை நீக்கி சர்வதேசத்திற்கு நெருக்கமான நாடாக ஆக்குவதில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேவினால் பல முக்கிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நட்புறவான அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினூடாக சர்வதேசத்துடன் உறவுகளை பேணிவரும் இப்பயணத்தில் இலங்கைக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment