ஒரே நாளில் பெய்த மழையால் அக்குறணையில் வரலாறு காணாத வெள்ளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

ஒரே நாளில் பெய்த மழையால் அக்குறணையில் வரலாறு காணாத வெள்ளம்

மலையக பிதேசங்களில் நேற்று (29) பெய்த தொடர்ச்சியான அடை மழை காரணமாக அக்குறணை பிரதேசம் நீரில் மூழ்கியதோடு, ஏ9 பாதை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை நீரில் மூழ்கியது.​

கடும் மழை மாரணமாக நேற்று (29) மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, கண்டி - மாத்தளை வீதி நீரில் மூழ்கியதையடுத்து, போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்த்து.

அக்குறணை ஆறாம் கட்டை பிரதேசம் முதல் ஏழாம் கட்டை பிரதேசம் வரை சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிக பிரதேசம் முற்றாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 350 க்கும் அதிகமான வியாபார நிலையங்களும் வீடுகளும் நீரிழ் பகுதியளவு மூழ்கி பாதிக்கப்பட்டதுடன் பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்டி மாத்தளை ஏ9 வீதியில் அமைந்துள்ள அக்குறணை நகரம் நீரில் மூழ்கியதால் ஏ9 வீதியில் சுமார் 4 மணித்தியாலங்கள் வாகன போக்குவருத்து தடைப்பட்டு, நகரம் ஸ்தம்பிதமடைந்தது. 
பொலன்னறுவையில் இருந்து கண்டியை நோக்கி பயணித்த பஸ் வண்டி ஒன்று வெள்ளத்தில் சிக்கியதால் பிரதேச மக்களின் கடும் பிரயத்தனத்திற்கு மத்தியில் அதில் பயணித்த பிரயாணிகள் மீட்கப்பட்டனர். பஸ் வண்டி மற்றும் பிரயாணிகள் கயிறுகளால் பிணைக்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தற்போது வெள்ளம் வடிந்தோடியுள்ள நிலையில், அக்குறணை நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருவதால், அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

எனவே கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி செல்லும் வாகனங்கள் அக்குரணை நகரை தவிர்த்து, வத்தேகம ஊடாக மாற்று வழியைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜே.எம். ஹபீஸ்

No comments:

Post a Comment