ஜனாதிபதியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருது - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

ஜனாதிபதியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு விருது

2016ம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. 

இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் நாளை காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிதியாண்டில் நாடு முழுவதிலும் உள்ள 837 மொத்த அரச நிறுவனங்களில் பெறப்பட்ட தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் பல்வேறு பொருட்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட உயர் செயற்பாடுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கு இந்த விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

அரச கணக்காய்வு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு இந்த வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment