வடக்கு, கிழக்கு வீதி அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

வடக்கு, கிழக்கு வீதி அபிவிருத்தி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்துரையாடல்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது சம்பந்தமாக ஜப்பான் முதலீட்டாளர்களுடன் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (04) செவ்வாய்க்கிழமை கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வீதி மற்றும் புகையிரத பாதை என்பவற்றை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலீடுகளை மேற்கொள்வது சம்பந்தமாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment