நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பான பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

நாளைய ஆர்ப்பாட்டம் தொடர்பான பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு

நாளை (05) கொழும்பில் மேற்கொள்ளப்பட உள்ள எதிர்ப்பு பேரணியின் போது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் ஒன்று கூட தடை விதிக்குமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

ஜனாதிபதியின் பாதுகாப்பு மற்றும் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட தடைவிதித்து உத்தரவிடுமாறு கோரி பொலிஸார் மனுத் தாக்கல் செய்தனர். 

கூட்டு எதிர்க்கட்சியினர் நளைய தினம் "மக்கள் பலம் கொழும்புக்கு" என்ற கருப் பொருளில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment