மலையகம் சார்ந்த தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கும் உதவுகரம் நீட்ட வேண்டும் கல்வி இராஜாங்க அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Sunday, September 30, 2018

மலையகம் சார்ந்த தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கும் உதவுகரம் நீட்ட வேண்டும் கல்வி இராஜாங்க அமைச்சர்

தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் இடையிலான பிணக்குகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் ஹட்டனில் உருவாக்கப்படும் தொழில் திணைக்கள கட்டிடம் அமைய வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் 8 கோடி ரூபா செலவில் மூன்று மாடிகளை கொண்ட தொழில் திணைக்கள கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 30.09.2018 அன்று இடம்பெற்றது. இதில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, தோட்ட தொழிலாளர்களுக்கும், நிர்வாகங்களுக்குமிடையில் ஏற்படக் கூடிய தொழில் பிணக்குகள் தொடர்பில் தோட்ட நிர்வாக அதிகாரிகள் உடன் தரகர்கள் ஊடாகவே பேசப்பட்டு வருகின்றது.

தொழிலாளர்களுக்கு சிங்கள மொழி தெரியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கும் அமைச்சர் எதிர்வரும் காலத்தில் தரகர்கள் அற்ற பேச்சுவார்த்தையை அட்டன் தொழில் திணைக்களத்தின் ஊடாக தொழிலாளர்களும் தோட்ட அதிகாரிகளும் தீர்த்துக் கொள்ள வழிசமைக்க வேண்டும்.

அதேநேரத்தில் தரகர்கள் ஊடாக தோட்ட அதிகாரிகளிடம் பேசப்பட்டு வரும் தொழிலாளர்கள் பிரச்சினைகளை பேச்சுவார்த்தையில் ஈடுப்படும் தரகர்கள் அவர்களின் இலாபத்திற்காக பேசப்பட்டு வருவதாகவும், இவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு இலட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் மக்கள் வாழும் ஹட்டன் பிரதேசத்தில் தொழில் உறவு அமைச்சினால் 8 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் தொழில் திணைக்கள கட்டிட தொகுதி புதிய நல்லாட்சி அமைச்சியினால் உருவாக்கப்படுவதையொட்டி மகிழ்சியடைவதாகவும், அமைச்சுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த கட்டிடத்தின் ஊடாக எதிர்காலத்தில் தொழில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் தோட்ட முகாமையாளர் மற்றும் தொழிலாளர்களுக்கிடையில் பாதிப்புகள் எற்படாவிடத்து தொழிலாளர்களு்ககு சாதகமான வகையில் இத்தொழில் திணைக்கள அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த அவர் நியாயமான முறையில் பிரச்சினைகள் அனுகப்பட வேண்டும்.

நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சென்று தமிழர்களுக்கு உதவுகரம் நீட்டும் அதேபோல் மலையகம் சார்ந்த தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கும் உதவுகரம் நீட்டப்பட வேண்டும்.

ஜெனிவா நாட்டில் ஜனாதிபதி அவர்கள் நாட்டின் தமிழர்கள் தொடர்பாக குரல் எழுப்பும் போது நாடு புகழ் அடைகின்றது. அதேபோன்று இந்த நாட்டின் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளும் தீர்க்கபட வேண்டும் என தெரிவித்த அவர், அரசாங்கத்தின் ஊடாக தமிழ் மக்களுக்கு செய்யும் அனைத்து வேலைத்திட்டங்களுக்கும் முழுயைான ஆதரவு வழங்குவோம் என நம்பிக்கையும் தெரிவித்தார்.

க.கிஷாந்தன்

No comments:

Post a Comment