களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு ஒரு வாரத்துக்குள் வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதி அமைச்சர் பைசல் காசீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு 60 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு ஒரு வாரத்துக்குள் வாக்குறுதியை நிறைவேற்றினார் பிரதி அமைச்சர் பைசல் காசீம்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசல் காசீம் 60 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி பிரதி அமைச்சர் மேற்படி வைத்தியசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள குறைபாடுகளை பார்வையிட்டார். அந்தக் குறைபாடுகளை தீர்ப்பதற்காக உடனடி நிதி உதவியை வழங்குவதாக வைத்தியசாலை அதிகாரிகளிடம் வாக்குறுதி வழங்கினார். அவ்வாறு வாக்குறுதி வழங்கி ஒரு வாரத்துக்குள் நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, ஒதுக்கப்பட்டுள்ள 60 லட்சம் ரூபாவில் 50 லட்சம் ரூபா வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும் 10 லட்சம் ரூபா நீர் விநியோக மற்றும் புனரமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த வைத்தியசாலையின் ஏனைய குறைபாடுகளையும் தீர்த்து வைப்பதற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் பைசல் காசீம் கூறியுள்ளார்.

பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு

No comments:

Post a Comment