ஊவா மாகாண வைத்தியசாலைகளில் இன்று வேலை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, September 4, 2018

ஊவா மாகாண வைத்தியசாலைகளில் இன்று வேலை நிறுத்தம்

மேலதிக நேர கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊவா மாகாணத்தின் அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலை நிறுத்தம் செய்வதற்கு மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணி முடிவு செய்துள்ளது. 

அதன்படி இன்று (04) காலை 07.00 மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்தம் செய்வதாக மருத்துவ உதவியாளர் சேவைகள் தொழிற்சங்க கூட்டணியின் தலைவர் பி.திலகரத்ன கூறினார். 

இந்த வேலை நிறுத்தத்தில் தாதி உதவியாளர்கள் மற்றும் வைத்திய உதவியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2000 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment